பெற்றோர்கள் கவனத்திற்கு
- தினந்தோறும் குழந்தைகளின் நாட்குறிப்பேட்டைத் தவறாமல் பார்த்துக் கையொப்பமிட வேண்டும்.
- குழந்தைகள் பள்ளிக்கு தினந்தோறும் வருவதை உறுதி செய்ய வேண்டும்.
- வீட்டுப் பாடங்களைச் சரிவர செய்ய குழந்தைகளுக்கு உதவிட வேண்டும்.
- குழந்தைகள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவதற்கு பெற்றோர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
- பள்ளியில் நடைபெறும் பெற்றோர்-ஆசிரியர் கழகக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
- குழந்தையின் உடல்நலம் தொடர்பான விவரங்களை வகுப்பாசிரியர் / தலைமை ஆசிரியரிடம் தவறாமல் தெரிவித்தல் வேண்டும்.
- குழந்தைகள் நன்கு கல்வி பயிலவும், ஒழுக்கத்தில் சிறந்து விளங்கவும் பெற்றோர்கள் உதவிட வேண்டும்.
- தங்கள் குழந்தைகளின் கற்றல் திறனை அவ்வப்போது வகுப்பாசிரியரிடம் கலந்தாலோசித்துத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.
- பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் படிப்பு மட்டுமின்றி மற்ற விருப்பமான துறைகளிலும் முன்னேற ஊக்கமும், ஒத்துழைப்பும் நல்க வேண்டும்.