About Us
கடந்த இருபது வருடங்களாக கல்வித் துறையில் பணியாற்றும் நாம் பெற்றுக் கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் மாணவர்கள் கல்வியின் உயரிய இலக்குகளை அடைந்து கொள்ள கற்பித்தலில் எவ்வாறான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தொடர்ச்சியாக ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த இணைய தளத்தை வடிவமைத்துள்ளோம்.
பாலர் முதல் உயர் தரம் வரையான அனைத்து மாணவர்களுக்கும் தேவையான அனைத்து பாடத் திட்டங்களையும் அதே போன்று பாடத் திட்டத்துக்கு மேலதிகமாக விளையாட்டு, பொழுது போக்கு, தலைமைத்துவம், ஆன்மிக வழிகாட்டல் ஆகியனவும் கிடைக்கும் விதத்தில் இந்த தளம் காணப்படுவது இதன் சிறப்பியல்பு ஆகும்.
தேசிய கல்விக் கொள்கைகளுக்கு இணங்க, மாணவர்களை துறைசார் வல்லுனர்களாக மாற்றி நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னேற்றுவதற்காக, விழுமியங்களையும் நல்லொழுக்கங்களையும் பேணி இணக்கத்துடன் வாழும் எதிர்கால சந்ததியினரை உருவாக்க இந்த தளம் முழுமையான பங்களிப்பை வழங்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
மாறிவரும் உலக நடைமுறைகளுக்கேற்ப இணையத்தளம் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.
அதனைப் புறந்தள்ளிவிட்டு எம்மால் பிற நாடுகளோடும் பிற சமூகங்களோடும் போட்டியிட முடியாது.
அதே நேரம் இணைய தளத்தைப் பயன்படுத்தும் போது மாணவர்கள் வழிதவறிச் சென்று விடாமல் பாதுகாத்துக் கொள்ளும் கடமையும் எமக்கு உண்டு.
அதற்கான வழிகாட்டலையும் பெற்றோருக்கு நாம் வழங்குகிறோம்.
இந்தத் தளத்தைப் பயன்படுத்தி நீங்களும் ஒளிமயமான எதிர்காலத்தை அடைந்து கொள்ள எமது நல் வாழ்த்துக்கள்.