AI - Artificial Intelligence
AI - Artificial Intelligence (செயற்கை நுண்ணறிவு) மூலம் உலகின் தலையெழுத்தையே மாற்றிப் போடும் தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்தில் அதீத வளர்ச்சி கண்ட உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
உலகம் மிக வேகமாக முன்னேறிக் கொண்டு செல்லும் நிலையில் இலங்கை போன்ற பின்தங்கிய நாடுகளால் முன்னேறிய உலக நாடுகளுடன் போட்டி போடுவதை நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலை தான் இன்று காணப்படுகிறது.
அதற்கான மிக முக்கிய காரணம் கல்வி, தொழினுட்பம், ஆராய்ச்சி போன்ற துறைகளில் காணப்படும் பின்னடைவு ஆகும்.
அதிலும் இலங்கையில் அண்மைக்கால அரசியல் நெருக்கடி மற்றும் பொருளாதார பின்னடைவுகளால் கல்விச் செயற்பாடுகள் மேலும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
பாடசாலைக் கல்வியை மாத்திரம் நம்பி யாருமே இல்லை என்பது நிதர்சன உண்மை. ஒவ்வொரு பெற்றோரும் எத்தனை இடங்களுக்கு வேண்டுமானாலும் அழைத்துச் சென்று எப்படியாவது தங்கள் பிள்ளைகளை படிப்பித்துக் கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கிறார்க
அதற்காக அதிகம் செலவாகிறது, நேர விரயம் தவிர்க்க முடியாதது. பெற்றோரின் வேலைகளும் பாதிக்கப்படுகிறது. பிள்ளைகளின் போக்குவரத்து மற்றும் ஒழுக்கம், பாதுகாப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகிறது.
அவ்வாறு நெருக்கடிகளுக்கு மத்தியில் அனுப்பும் போதும் பெற்றோரின் எதிர்பார்ப்புக்களை முழுமையாக நிறைவேற்ற முடியாத நிலை காணப்படுகிறது.
நாமும் தனியார் வகுப்புகளில் சுமார் 20 வருடங்களாக கற்பிக்கிறோம். தனியார் கல்வி நிலையம் ஒன்றை நடத்திக் கொண்டும் இருக்கிறோம்.
ஒவ்வொரு பிள்ளை மீதும் தனிப்பட்ட கவனம் எடுத்து கற்பிக்க முடியாமை, மாணவர்களின் முன்னறிவு மட்டம் போதாவிட்டால் குறித்த பாடப்பரப்பு விளங்காமை, நவீன வசதிகளுடன் கற்பித்தல்களை மேற்கொள்ள முடியாமை, வேகமாக கற்கும் பிள்ளைகளுக்கு வேகமாக முன்னேறிச் செல்ல முடியாமை. பின்தங்கிய மாணவர்களால் கற்க முடியாமை என்று தனியார் வகுப்புகளிலும் ஏறாளமான பிரச்சனைகளுக்கும் ஆசிரியர்களாகிய நாமும் பெற்றோர்களும் முகம் கொடுக்க நேரிடுகிறது.
Online 'Zoom' மூலம் ஒரு சில பாடங்களுக்கான வசதிகளை பெற்றோர்கள் ஏற்பாடு செய்து கொடுப்பதன் மூலம் பிள்ளைகளின் தேவை ஓரளவு சரிசெய்யப் படுகிறது.
பெற்றோர்களின் பொருளாதார நெருக்கடிகள் மூலம் ஒரு சில பாடங்களுக்கு மட்டுமே தனியார் வகுப்புகளுக்கு அனுப்ப முடியுமாக இருக்கிறது. பொருளாதார வசதி இருந்த போதிலும் எல்லாப் பாடங்களையும் கற்பிக்கும் தனியார் கல்வி நிலையங்கள் அதிகம் காணப்படாததும் ஒரு பெரும் குறையாகும்.
இவற்றுக்கான தீர்வு தான் என்ன?
My new home school தான் இதற்கான மிகச் சிறந்த தீர்வாக அமைகிறது.
அதே போன்று இணையதளப் பாவனையால் மாணவர்களின் ஒழுக்க வாழ்வு பாதிக்கப்படுகிறது.
அதேபோல காலமும் நேரமும் வீணாக கழிகிறது.
அவற்றை முறைப்படுத்த எமது இணைய தளம் மிகப் பொருத்தமான ஒன்றாக அமைகிறது.
எனவே இன்றே எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்